News August 7, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.7) மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் வட்டாரம், வாலாஜாபாத், குன்றத்துர் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை<> கிளிக் செய்<<>>து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 7, 2025

பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,09,883 குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 7, 2025

பெண் கொலை வழக்கு: குற்றவாளி கைது

image

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரை மர்ம நபர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி கொலை செய்தனர். இதுதொடர்பாக புருஷோத்தமன் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபரை காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் இன்று (07.08.2025) தலைமறைவான குற்றவாளியான ராஜசேகர் என்பவரை கைது செய்துள்ளனர்.

News August 7, 2025

காஞ்சிபுரம்: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஆக.9ம் தேதி பொது விநியோகத் திட்ட முகாம் ஆலப்பாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் சிறுபினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளாவூர், திருபெரும்புதூர் வட்டத்தில் தண்டலம், குன்றத்தூர் வட்டத்தில் பழந்தண்டலம் ஆகிய பகுதியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், பெயர் நீக்கம், புதிய ரேஷன் அட்டை பெற போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். (SHARE)

error: Content is protected !!