News August 7, 2025
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (ஆக.06) நடைபெற்றது. உடன் உதவி ஆணையர்(கலால்) ராஜு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், உதவி இயக்குநர் (திறன் பயிற்சிகள்) சிவசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Similar News
News August 7, 2025
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாளை ஆகஸ்ட் 8 திருவண்ணாமலை ஆடி பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் தமிழக போக்குவரத்துக் கழகம் செயலி வாயிலாகவோ இணையதளம் வாயிலாகவோ தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
News August 7, 2025
கோட்டகுப்பம் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் SC, ST வன்கொடுமை சட்டம் புகார் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என செந்தாமரை என்பவர் புகார் மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி DSP சுனில் என்பவரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
News August 7, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய இரவு ரோந்து பணி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட காவல் துறை. மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரும்போது அருகே உள்ள காவலரது எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரியபடுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க