News August 7, 2025
நம்மாழ்வார் விருது பேர் தென்காசி விவசாயிகளுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் https:/www.tnagrisnet.tn.gov.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் வலைதளத்தில் பதிவு செய்ய 15.09.2025-ம் தேதிக்குள் பதிவுக்கட்டணம் ரூ.100/- செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
தென்காசி: பேருந்து தொடர்பாக புகார் அளிக்க.!

தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் எத்தனையோ பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெண்களை இழிவாக நடத்துவதும், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா 1800 599 1500 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது 149 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.
News August 10, 2025
தென்காசி: IOB வங்கியில் வேலை

தென்காசி மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <
News August 10, 2025
மகளிர் சுய குழுக்களின் வாரசந்தை

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொட்டல் புதூர் பொன் நகர் அருகே வார சந்தையில் நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் அரிசி சிறுதானிய உணவுகள் தானியங்கள் செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.