News August 7, 2025

காலியாக உள்ள தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 7, 2025

மைசூர் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

image

கடலூரில் மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு வழியாக மைசூர் செல்லும் ரயில் (16231) வரும் ஆக.,20ஆம் தேதி மட்டும் ஒரு மணிநேரம் தாமதமாக கடலூரில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக மைசூர் செல்லும் என பொதுமக்களுக்கு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 7, 2025

மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

image

மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில் (16847) ஆக.,20-ம் தேதி வரை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்லும். மற்ற நாட்களில் வழக்கம் போல் திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் என பொதுமக்களுக்கு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 7, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

image

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் செய்து <<>>ஆக.,17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தஞ்சையில் நடைபெற உள்ளது. இத்தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!