News August 7, 2025
50% வரி… எப்போது அமலுக்கு வரும்?

மிரட்டலுக்கு பணியாததால், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை 50% ஆக அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். அண்மையில் விதிக்கப்பட்ட 25% வரி உயர்வு நாளை முதல் அமலாகும் என்றும், இன்று அறிவிக்கப்பட்ட கூடுதல் 25%, அடுத்த 21 நாள்களுக்குள் அமலுக்கு வருமெனவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சீனாவுக்கு (51%) அடுத்து இந்தியா மீதுதான் அமெரிக்கா அதிக வரிவிதித்துள்ளது.
Similar News
News August 7, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது.. HAPPY NEWS

ஜூன், ஜூலை போல் இல்லாமல் மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளித் தருகிறது ஆகஸ்ட் மாதம். சுதந்திர தினத்தையொட்டி 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து சனிக்கிழமை கோகுலாஷ்டமி, ஞாயிறு (ஆக.16 & 17) என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை. இதனால், சொந்த ஊருக்கு செல்ல பலரும் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க புக் பண்ணிட்டீங்களா?
News August 7, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை கைவிட்ட இந்திய நிறுவனங்கள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசின் எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் முதலில் 25% வரிவிதிப்பு அறிவித்தபோதே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக பிரபல புளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து அந்த நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
News August 7, 2025
இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா?

டாக்டர் சொல்லாமலே இரும்புச்சத்து மாத்திரை உட்கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கல்லீரல், இதயம், கணையம், மூளை போன்ற உள்ளுறுப்புகள் சேதமடையலாம் என்றும், சோர்வு & மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் வார்னிங் தருகின்றனர். குழந்தைகளுக்கு சிறு டோஸ் கொடுத்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.