News April 6, 2024
நாட்டை அழிக்கிறார் மோடி

நாட்டை மோடி அழித்து கொண்டிருப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்களிடம் அவர் வெளியிட்டார். அப்போது பேசிய சோனியா காந்தி, எதிர்க்கட்சியினரை தனது கட்சியில் சேரும்படி பாஜக நிர்பந்திப்பதாக விமர்சித்தார். இதேபோல் நாட்டையும், நாட்டின் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Similar News
News February 4, 2026
மாரடைப்பை 3 ஆண்டுகளுக்கு முன்பே அறியலாம்

மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகள் முன்பே கணிக்கும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மாரடைப்பு தாக்கிய 2.5 லட்சம் நோயாளிகளின் ரத்தத்தை சோதித்ததில், சி-ரியாக்டிவ் புரதம் & ட்ரோபோனின்(இதயம் பாதிக்கப்படும் போது வெளியேறும் புரதம்) அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர். இவற்றை கண்காணிப்பதன் மூலம், முன்கூட்டியே மாரடைப்பு ஆபத்தை கணிப்பதுடன், தகுந்த சிகிச்சை மூலம் அதை தடுக்கவும் முடியும் என்கின்றனர்.
News February 4, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 காலிபணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News February 4, 2026
T20 WC: இன்று இந்தியா Vs தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடருக்கு, முன்னோட்டமாக இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால், பிரதான ஆட்டங்களில் அவருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது. திலக் வர்மா அணிக்கு திரும்பியுள்ளதால், டீம் காம்பினேஷனில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். நவி மும்பையில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


