News August 6, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது

இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆக.15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து சனி, ஞாயிறு (ஆக.16 & 17) என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், பலரும் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க புக் பண்ணீட்டீங்களா?
Similar News
News August 10, 2025
வசூலை அள்ளும் ‘மகாவதார் நரசிம்மா’!

சாமி படத்தை அனிமேஷனில் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்தவர்களின் கணிப்பை ‘மகாவதார் நரசிம்மா’ மாற்றிவிட்டது. படம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து தற்போது வரை ₹150 கோடி வசூலை குவித்துள்ளது. யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவான இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த 6 படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றை பிரமாண்டமாக தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது ஹொம்பாலே பிலிம்ஸ். நீங்க படம் பாத்துட்டீங்களா?
News August 10, 2025
நேரம் பார்த்து பேசு!

காட்டில் ஒரு சிங்கம், ‘என் வாயில் துர்நாற்றமா?’ என ஆடு ஒன்றிடம் கேட்டது. ‘ஆமாம்’ என ஆடு கூற, கோபத்தில் உடனே சிங்கம் ஆட்டை கொன்றது. இதே கேள்வியை ஓநாயிடம் சிங்கம் கேட்ட, அது ‘இல்லை’ என்றது. ‘பொய் சொல்கிறாய்’ என அதையும் கொன்றது. நரியிடம் கேட்ட போது, ‘எனக்கு ஜலதோஷம், அதனால் வாசனை தெரியவில்லை’ எனக் கூறி உயிர் தப்பியது. புத்திசாலிகள் எப்போது, என்ன பேச வேண்டும் என அறிவார்!
News August 10, 2025
பாஜகவுடன் கூட்டணியா? இன்று மதியத்திற்குள் OPS முடிவு

இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசித்துள்ளார். இதில், ஒருதரப்பு பாஜகவுடன் இணையக் கூடாது என்றும், மற்றொரு தரப்பு தற்போதை சூழலில் பாஜகவுடன் இணைவதுதான் சரியான முடிவு என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்றுநேரத்தில் கூட்டணி குறித்து OPS முடிவு எடுக்கவிருக்கிறார்.