News August 6, 2025
அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்த வேண்டும்: அண்ணாமலை

திருப்பூரில் SSI படுகொலை சம்பவமானது நமது சமூகம் அழிவுப்பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ள அரசாலும், அதிக போதை உள்ள மதுவாலும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, துணை ஆய்வாளர் மற்றும் அதற்கு கீழ் பொறுப்பு வகிக்கும் அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
பள்ளி, கல்லூரி மாணவிகளை கர்ப்பமாக்கிய இளைஞர்

ஊட்டியை சேர்ந்த பிரவீன், 10-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். அதேநேரத்தில், கல்லூரி மாணவி ஒருவருடனும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவியை திருமணம் செய்த நிலையில், பள்ளி மாணவியை விட்டு பிரவீன் விலகியுள்ளார். தற்போது, பள்ளி, கல்லூரி மாணவிகள் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் வெளியே தெரியவர, போக்சோவில் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News December 8, 2025
இனி ஜியோ ஸ்டாரில் ICC போட்டிகளை பார்க்க முடியாது

ICC தொடர்களை ஒளிபரப்பும் உரிமையில் இருந்து விலக விரும்புவதாக ஜியோ ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆண்டில் ₹25,760 கோடி இழப்பை சந்தித்ததால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. 2026 டி20 WC-க்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால், புதிய நிறுவனத்தை தேடும் பணியில் ICC ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக Sony, Netflix, Amazon Prime உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
News December 8, 2025
10 வயசு கம்மியா தெரியணுமா? செம்ம TIP!

முகத்தில் கிராம்பு பாதாம் எண்ணெய் தடவி வந்தால் இளமையாக தெரிவீர்கள் என கூறப்படுகிறது. ➤100 மில்லி பாதாம் ஆயிலை சூடுபடுத்தி, அதில் 15 கிராம்பை சேருங்கள் ➤எண்ணெய் நன்கு சூடானதும் அதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பதப்படுத்தி வையுங்கள் ➤தினமும் இரவில் தூங்க செல்லும் முன், முகத்தில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்யலாம் ➤அல்லது காலையில் குளிக்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு கூட தடவிக்கொள்ளலாம். SHARE.


