News August 6, 2025
காவல் நிலையத்தில் இறந்தவரின் புகைப்படம் வெளியீடு!

கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில், 60 வயதான ராஜன் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இறந்தவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Similar News
News March 4, 2026
திமுக மாவட்ட செயலாளர் நிர்வாகிகளிடம் ஆலோசனை

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட – சுகுணாபுரம் பகுதிகழகம் – இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் தக்னி மஸ்ஜித் & கபர்ஸ்தான் மஸ்ஜித் ஜமாத்தில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தேவைகளை கேட்டறிந்து, கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொ.ரவி நிதியுதவி வழங்கினார். உடன் சுகுணாபுரம் பகுதி செயலாளர் சிவசக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
News March 4, 2026
கோவை: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News March 4, 2026
அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் மைதானத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் SP.வேலுமணி மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் KR.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.


