News August 6, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (ஆக.06) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
மக்காச்சோளம் செயல் விளக்க திடல் விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி (ம) உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் முகையூர், காணை, வல்லம், மரக்காணம் திருவெண்ணைநல்லூர் வட்டாரங்களில் 100 ஹெக்டேர் பரப்பளவில் மானியம் பெற்று மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்க விவசாயிகள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுக விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்
News August 7, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை மறுநாள் (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 7, 2025
விழுப்புரம்: பெற்றோரை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியுடைய குழந்தைகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர்!