News August 6, 2025
PM மோடியின் பலவீனத்தால் USA மிரட்டல்: ராகுல்

அமெரிக்காவில் இந்தியப் பொருள்களுக்கு <<17323903>>50% வரி <<>>என்பது நியாயமற்ற ஒன்று என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி எனக் கூறியுள்ள அவர், PM மோடியின் பலவீனம் இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசை மறைமுக விமர்சித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
இந்தியாவிற்கு வரும் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில், PM மோடியுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அவர் நேரில் ஆலோசனை செய்வார். NSA தலைவர் அஜித் தோவல் இதை தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புடினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
News August 7, 2025
5 மாதத்தில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள்: ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் 2024 மே மாதம் லோக் சபா தேர்தலும், நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. லோக் சபாவில் வென்ற காங்., கூட்டணி, சட்டசபையில் தோல்வியடைந்தது. இதுபற்றி பேசிய ராகுல், இரு தேர்தலுகளுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் அதிகமான வாக்குப்பதிவுகள் நடந்ததுமே இத்தோல்விக்கு காரணமென்றார்.
News August 7, 2025
தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுதந்திர தின பொது விடுமுறை, வார விடுமுறை (ஆகஸ்ட் 15, 16, 17) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 4 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் நண்பர்கள் சீக்கிரம் திட்டமிடுங்கள்!