News August 6, 2025
FLASH: அமெரிக்காவுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே ரஷ்யாவிடம் இருந்து Oil பொருள்கள் வாங்குவதாகவும், தேச நலனை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவை போலவே இந்தியாவும் செயல்பட நேரிடும் எனவும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 7, 2025
75% வருகை கட்டாயம்: CBSE

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் 75% வருகை பதிவேட்டை கொண்டிருப்பது அவசியம் என CBSE தெரிவித்துள்ளது. இந்த வருகை பதிவுகளை கொண்டிருக்காத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், அவசரநிலை, மெடிக்கல் எமெர்ஜென்ஸி, தேசிய / சர்வதேச போட்டிகளால் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு 25% தளர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News August 7, 2025
டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுமினியம், ரயில்வே, சுரங்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது.
News August 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 7 – ஆடி 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை.