News August 6, 2025
மாநகர காவலர்கள் ரோந்து பணில் துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் இரவு ரோந்து காவல் பணிக்கு செல்லும் காவலர்கள் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் 4 நாட்கள் ரத்து

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் 11, 12, 13, 14 ஆகிய 4 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
திருச்சி: வாழை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தின விழா மற்றும் உழவர் தின விழா வரும் ஆக.,21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வாழை விவசாயி விருது, சிறந்த வேளாண் அறிவியல் நிலைய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆக.,14-ம் தேதிக்குள் தாயனூர் தேசிய வாழை ஆராய்ச்சி மைய முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என மைய இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
திருச்சி: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <