News August 6, 2025

புதுகை: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

image

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

Similar News

News August 7, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகள் மாதம் ரூ.2000

image

புதுகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து உறவினர்களிடம் வாழும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ₹2000 உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி கல்வி கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 7, 2025

புதுகை: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

image

புதுகை மாநகராட்சி 13, 15 வார்டுகளுக்கு கார்த்திக் மஹாலிலும், அறந்தாங்கியில் 14, 15 வார்டுகளுக்கு வசந்தம் திருமண மஹாலிலும், அரிமளத்தில் கைக்குலான் வயல் சமுதாயக் கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறவுள்ளது. மேலும், மணமேல்குடியில் கரகத்திக்கோட்டை சேவை மையக்கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2025

புதுகை: ரூ.96,000 சம்பளத்தில் சொந்த ஊரில் அரசு வேலை!

image

புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’29’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே <<>>க்ளிக் செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!