News August 6, 2025
கவின் கொலை: ஷியாம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு

நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த மாதம் ஐ.டி. ஊழியர் கவின் கொலை தொடர்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசி இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
போதைக்கு எதிரான உறுதிமொழி கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: “போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளிலும் அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 11ஆம் தேதி தமிழ்நாடு தின உறுதிமொழி எடுக்கப்படும்.
News August 10, 2025
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் சரிவு

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் நீடிக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் பழவூர், காவல்கிணறு, கலந்தபனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி ஏற்ற இறக்கமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று 3000 மெகாவாட்டை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) அதிகபட்ச காற்றாலை மின் உற்பத்தி 2190 மெகாவாட்டாக சரிந்தது.
News August 10, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஆக.09) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.