News August 6, 2025
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்கா: EPS

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது திருப்பூர் சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் மத, சாதி சண்டைகள் இன்றி தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது என்றும், ரவுடிகள் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றதாகவும் கூறினார். ஆனால் தற்போது காவல்துறை அதிகாரியே வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார் என்று தெரிவித்தார்.
Similar News
News December 8, 2025
‘பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000’

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுத்தால் பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்கலாம் என EPS தெரிவித்துள்ளார். KN நேரு ₹1,020 கோடி வரை <<18501393>>ஊழல் செய்ததாக ED கூறியுள்ளதை<<>> சுட்டிக்காட்டி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நயினார் நாகேந்திரனும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வலியுறுத்தியிருந்தார். பொங்கல் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.
News December 8, 2025
இதை விட கேவலமான விஷயம் இல்லை: அமைச்சர்

உலகத்திலேயே சொந்தமாக ஏர்லைன்ஸ் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதை விட கேவலமான விஷயம் ஒன்று இல்லை என விமர்சித்த அவர், இங்கிருக்கும் மதுரைக்கு செல்ல ₹50 ஆயிரம் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பிளைட் வேண்டாம் என டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரயில், பஸ்ஸில் செல்ல அவர் முடிவெடுத்ததாகவும் அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
News December 8, 2025
கணவரை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

ஆண்கள் பற்றாக்குறையால் கணவரை வாடகைக்கு எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், ஐரோப்பா நாடான லாட்வியாவில் இந்த விநோதம் நடக்கிறது. அங்கு 116 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இளம் பெண்கள் ‘Husbands for Rent’ முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?


