News August 6, 2025
BREAKING: திருப்பூர் எஸ் ஐ கொலை வழக்கில் 2 பேர் சரண்

திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் சிக்கனூத்தில் தந்தை-மகன் வழக்கு விசாரணைக்கு சென்ற எஸ்.எஸ் ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தற்போது சரணடைந்துள்ளனர், மேலும் தலைமறைவாக உள்ள 3வது நபரான மணிகண்டனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 10, 2025
பாலியல் தொழில் நடத்தி வந்த 3 பேர் கைது

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வாடகை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேக் முகமது என்கிற சலீம் (30), விக்னேஷ் (23) மற்றும் பன்னீர்செல்வம் (35) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
News August 9, 2025
திருப்பூரில் கூட்டுறவு சங்கத்தில் வேலை: ரூ.76,380 சம்பளம்!

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 9, 2025
திருப்பூர்: சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் பெயரில் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற நலம் பெறும், ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் அமித் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.