News April 6, 2024

சிறுபான்மையினர் விஷயத்தில் காங் – திமுக இரட்டை வேடம்

image

புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட காங் கட்சிகள் முஸ்லீம், சிறுபான்மையினர் விஷயத்தில் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிகிறது. இதையெல்லாம் உணர்ந்து பார்த்து மக்கள் அதிமுக வேட்பாளரான தமிழ்வேந்தனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

Similar News

News March 20, 2026

வேட்பு மனு தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர்

image

புதுச்சேரி சட்டமன்ற தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில், ரங்கசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாஜகவுடனான கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 20, 2026

BREAKING புதுச்சேரி: LJK-விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

image

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான (NDA) தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கூட்டணியில் இணைந்துள்ள எல்.ஜே.கே (LJK) கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News March 20, 2026

BREAKING புதுவை: தொகுதி ஒதுக்கீடு – முதல்வர் பேச்சுவார்த்தை

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டியாவை இன்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக-அதிமுக-எல்.ஜே.கே கூட்டணி 14 தொகுதிகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!