News August 6, 2025
தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி நாளை(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.
News August 7, 2025
சூது செய்து பாமகவை பறிக்க துடிக்கும் அன்புமணி: ராமதாஸ்

அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் பாமகவை பறிக்க முயல்வதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியின் தலைவர் பதவி ஜூன் மாதத்தோடு காலாவதியாகிவிட்டதால், நானே தலைவர் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், கூட்டணி முடிவால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறிய அவர், பொய்களையும், கட்டுக்கதைகளையும் கூறி ஐயா ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்துவிட்டார் என்று ஆதங்கப்பட்டார்.
News August 7, 2025
Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

1. குட்டி சிங்கத்தின் பெயர் என்ன?
2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
3. உயிரினங்கள் சுவாசிக்க என்ன வாயு தேவை?
4. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தளபதி யார்?
5.உலகின் மிகச்சிறிய பறவை எது?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
பதில்கள் Way2News-ல் மதியம் 12:30 மணிக்கு வெளியாகும்.