News August 6, 2025
ஜேம்ஸ் கேம்ரூனின் அடுத்த பிரமாண்ட படைப்பு

அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து ‘Last Train From Hiroshima’, ‘Ghosts of Hiroshima’ ஆகிய இரு புத்தகங்கள் வெளியாகின. இந்த 2 புத்தகங்களை அடிப்படையாக வைத்து டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவதாரின் மீதமுள்ள பாகங்கள் வெளியான பின் இப்படம் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News August 7, 2025
கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.
News August 7, 2025
சூது செய்து பாமகவை பறிக்க துடிக்கும் அன்புமணி: ராமதாஸ்

அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் பாமகவை பறிக்க முயல்வதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியின் தலைவர் பதவி ஜூன் மாதத்தோடு காலாவதியாகிவிட்டதால், நானே தலைவர் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், கூட்டணி முடிவால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறிய அவர், பொய்களையும், கட்டுக்கதைகளையும் கூறி ஐயா ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்துவிட்டார் என்று ஆதங்கப்பட்டார்.
News August 7, 2025
Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

1. குட்டி சிங்கத்தின் பெயர் என்ன?
2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
3. உயிரினங்கள் சுவாசிக்க என்ன வாயு தேவை?
4. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தளபதி யார்?
5.உலகின் மிகச்சிறிய பறவை எது?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
பதில்கள் Way2News-ல் மதியம் 12:30 மணிக்கு வெளியாகும்.