News August 6, 2025
துவரை பயிர் சாகுபடிக்கு ரூ.7750 மானியம்

விராலிமலை வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை நாற்று மூலம் நடவு பயிராக சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.7,750 மானியம் வழங்கப்பட உள்ளதாக விராலிமலை உதவி வேளாண் இயக்குனர் பா.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 10, 2025
புதுக்கோட்டை: சிறுமியை கடத்த முயன்ற சிறுவன்!

அறந்தாங்கி அருகே உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் அருகே முகத்தை மறைத்து கொண்டு நின்ற சிலர் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த மாணவி இதனை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்புகாரின் பெயரில் காவல்துறையினர் திருநாளூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த பாண்டி (19), அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
News August 10, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
புதுக்கோட்டை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!