News August 6, 2025
LGBTQIA திருமணங்களை அரசு அனுமதிக்கணும்: ஐகோர்ட்

ஒரே பாலித்தனவர்கள், திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்கு தமிழக அரசு தகுந்த உத்தரவிட சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்தான வழக்கின் தீர்ப்பில், கல்வி & வேலைவாய்ப்புகளிலும் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Similar News
News August 7, 2025
கொலைநாடாக மாறிய தமிழ்நாடு: OPS விளாசல்

TN-ல் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக OPS சாடியுள்ளார். திருப்பூர் SSI கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், மதுவால் தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News August 7, 2025
வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக.4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000-ஆக இருந்த நிலையில், 3 நாளில் ₹4,000 அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்வை கண்டு வரும் தங்கம், வெள்ளி விலை, வரும் நாள்களில் குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News August 7, 2025
டிரம்புக்கு மறைமுக வார்னிங் கொடுத்த PM மோடி

இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்களின் நலனே முதன்மையானது என PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியர்களின் நலனின் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது எனவும் அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். புதிய வரிவிதிப்பால் டிரம்ப், இந்தியாவை மிரட்டி வரும் நிலையில், அவருக்கு PM மோடி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.