News August 6, 2025
இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம்: TN அரசு

உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும் என்று TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவிரி பணியில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன் காக்கும் வகையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டது. அதேபோல், முதற்கட்டமாக 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Similar News
News August 7, 2025
300 லிட்டர் தாய்ப்பால் தானம்! சாதனை படைத்த திருச்சி பெண்

திருச்சி காட்டூரை சேர்ந்த செல்வ பிருந்தா(32), உண்மையான தாய்மையின் உதாரணம். கடந்த 22 மாதங்களில், தனது குழந்தைகளின் தேவைக்கு அதிகமாக சுரந்த 300.17 லிட்டர் தாய்ப்பாலை, திருச்சி மகாத்மா காந்தி ஹாஸ்பிடலுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்காக இந்தியா புக், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ‘பிற குழந்தைகளுக்கும் பாசம் பஞ்சமில்ல’ என உணர்ந்து உதவிய இந்த தாய்க்கு பாராட்டுகள் குவிகிறது.
News August 7, 2025
கருணாநிதி நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் CM ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், சுமார் 2 KM தூரம் <<17327639>>அமைதி பேரணி<<>> சென்றார். அவருடன் உதயநிதி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
News August 7, 2025
BREAKING: தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது

சென்னையில் தங்கம் விலை இன்று(ஆக.7) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,400-க்கும், சவரன் ₹75,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.