News August 6, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு தடையில்லை: SC

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு தடையில்லை என்று SC தீர்ப்பளித்துள்ளது. ‘அம்மா மருந்தகம்’ உள்ளிட்ட 45 அரசு திட்டங்களுக்கு பெயர் பயன்படுத்தியது குறித்த ஆவணங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது. இதனையடுத்து, நீதிமன்றம் ஒன்றும் அரசியல் சண்டைக்கான களம் அல்ல எனக் கூறி, வழக்குத் தொடர்ந்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு ₹10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது திமுகவுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Similar News

News August 6, 2025

விஜய் தேவரகொண்டாவிடம் ED அதிகாரிகள் விசாரணை

image

ஐதராபாத்தில் உள்ள ED அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார். ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக இதே வழக்கில் கடந்த 30-ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜிடம் ED விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

News August 6, 2025

டிரம்புக்கு பதிலடி கொடுத்த RBI கவர்னர்

image

இந்தியப் பொருளாதாரத்தை <<17261037>>‘dead economy’<<>> என்ற டிரம்புக்கு, நமது ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் நடப்பாண்டு GDP வளர்ச்சி 6.5%-மாக இருக்கும் என்ற அவர், IMF கணித்துள்ள உலகப் பொருளாதார வளர்ச்சியான 3%-ஐ விட இது அதிகம் என்றார். மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18%, ஆனால் அமெரிக்கா வெறும் 11% மட்டுமே என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

News August 6, 2025

முதலிரவு அறையில் சடலமாக கிடந்த புதுமணப்பெண்!

image

வாழ்க்கையை தொடங்க முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற மாப்பிள்ளை வீடு திரும்பியபோது காலையில் தாலி கட்டிய மனைவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சோகமான சம்பவம் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. மணமேடையில் புன்னகையுடன் இருந்த ஹர்ஷிதா(22) இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் தெரியாமல் மாப்பிள்ளை நாகேந்திரன், ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!