News August 6, 2025

நெல்லையில் உள்ள பௌத்தர்கள் கவனத்திற்கு

image

நாக்பூரில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்தர்களுக்கு ரூ.5,000 மானியம் வழங்கபடும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது www.bcmbcw.tn.gov.in இணையதளத்தில் பெற்று, நவம்பர் 30-க்குள் சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று கேட்டுக்கொண்டார்.

Similar News

News August 24, 2025

நெல்லை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு

image

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பேசியதாவது: சதுர்த்தி விழா அமைதியாக கொண்டாட ஒத்துழைக்க வேண்டும். அரசு வகுத்துள்ள நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்க, கரைக்க வேண்டும்.

News August 24, 2025

நெல்லை: திருமணத் தடை நீக்கும் கோயில்

image

திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள சாலை குமாரசுவாமி திருக்கோவில், திருமணத் தடை உள்ளவர்கள் தரிசிக்க சிறந்த முருகன் திருத்தலமாகும். இங்கு மூலவர் ஆறுமுகத்துடன், பன்னிரு கைகளுடன் மயில்மேல் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். திருச்செந்தூர் கோவிலுக்கு இணையாக இங்கு பூஜைகள், விழாக்கள் அனைத்தும் அந்த ஸ்தல பாணியில் நடைபெறும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வருவது இக்கோயிலின் சிறப்பு* மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்தில் 3 கொலைகள் தடுப்பு

image

நெல்லை மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் எல்லைகளில், சதித்திட்டத்துடன் திட்டமிடப்பட்ட இரண்டு கொலைகளை ஜூன் மாதம் காவல்துறை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்தது. இதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 19 போலீசாருக்கு விருது வழங்கினார். நேற்று களக்காடு அருகே 5 பேரை கைது செய்ததால் மற்றொரு கொலை தடுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் நெல்லையில் 3 கொலை முயற்சிகள் தடுக்கப்பட்டன.

error: Content is protected !!