News August 6, 2025
தருமபுரியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (9445000908) எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!
Similar News
News August 7, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் தாய்மணம் ‘அன்பு கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளுக்கு 18 வயது வரை உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
தருமபுரி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <
News August 7, 2025
தர்மபுரியில் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன்(45), கூலி தொழிலாளி. கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற போது தர்மபுரியில் இருந்து வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடத்தூர் போலீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.