News August 6, 2025
வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000ஆக இருந்த நிலையில், 2 நாளில் ₹3,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News August 7, 2025
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் டெலிவரி ஆகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<17301267>>மிக ஆபத்தானது<<>> என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை என பல பாதிப்புகளை ஏற்படுத்துமாம். ALERT!
News August 7, 2025
காங்., வென்ற மாநிலங்களில் முறைகேடு இல்லையா? பாஜக

ராகுல் காந்தி உச்சபட்ச விரக்தியில் உள்ளதாகவும் அதன் வெளிப்பாடு தான் EC மீதான குற்றச்சாட்டுகள் என பாஜக MP சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். காங்., வென்ற மாநிலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை என்றும், மக்களும் இந்த ஒருசார்பான சீற்றத்தை பார்க்கிறார்கள் என்றார். நீண்ட காலமாக பாஜகவும் எதிர்கட்சியாக இருந்துள்ளது, ஆனால் ஒருபோதும் EC அதிகாரிகளை காங்., போல் மிரட்டியதில்லை என்றார்.
News August 7, 2025
அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!