News August 6, 2025
RECORD.. ஒரே நாளில் 707 மில்லியன் UPI பரிவர்த்தனை!

UPI வந்ததும் கையில் ரூபாய் நோட்டு புழக்கமே குறைந்து விட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் UPI பயன்பாட்டால், கடந்த 2-ம் தேதி மட்டும் 707 மில்லியன் (70 கோடியே 70 லட்சம்) பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. ஜூலையில் தினசரி 65 கோடி பரிவர்த்தனை நடைபெற்ற நிலையில், தற்போது மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. 2026-க்குள் தினசரி 100 கோடி பரிவர்த்தனை இலக்கை இந்திய அரசு வைத்துள்ளது. நீங்க எந்த UPI யூஸ் பண்றீங்க?
Similar News
News March 4, 2026
குஷியில் மதுராந்தகம் மக்கள்!

மதுராந்தகத்தில் 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பிப்ரவரி 2024ம் வருடம் பூமி பூஜை போடப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேலை தொடங்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற இருக்கிறது. பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
News March 4, 2026
அய்யா வைகுண்டர் வழியில் திமுக ஆட்சி: ஸ்டாலின்

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து, கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபம் போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் என்றவர். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் எனும் அய்யா வைகுண்டர் கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
ஆயுதப் படையில் 349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு https://upsc.gov.in/ தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு ஜூலை 19-ம் தேதி நடைபெறும்.


