News August 6, 2025
விருதுநகர்: 239 பேரிடம் மோசடி செய்தவர் குண்டாஸில் கைது

சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாகவும், மாதம் ரூ.50,000 லாபம் பெறலாம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 239 பேரிடம் ரூ.12 கோடி பெற்று மோசடி செய்து ஜூலை.7 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
சிவகாசியில் தயாராகும் “5டி” காலண்டர்

2026 புத்தாண்டை முன்னிட்டு, சிவகாசியில் காலண்டர் உற்பத்தி விறு விறுப்படைந்துள்ளது. தினசரி காலண்டர்கள், டேபிள் காலண்டர்கள், பிவிசி காலண்டர்கள், ஆர்ட் பேப்பர் டெய்லி காலண்டர்கள், பேன்ஸி டை கட்டிங் என பல்வேறு வகை காலண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஒரே காலண்டரில் 5 கோணங்களில் வெவ்வேறு படங்களை வெளிப்படுத்தும் 5டி காலண்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
News November 5, 2025
விருதுநகர்: தலைமை செயலகத்தில் வேலை

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 5, 2025
வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


