News August 6, 2025

கிரிக்கெட் அகராதியிலேயே.. சிராஜை புகழ்ந்த கவாஸ்கர்!

image

இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து பனிச்சுமை என்ற வார்த்தையை, முகமது சிராஜ் ஒழித்து விட்டதாக ஜாம்பவான் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார். நாட்டுக்காக விளையாடும் போது, வலி வேதனைகளை வீரர்கள் மறக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சமீபகாலமாக, Work load தொடர்பான கருத்துக்கள் இந்திய கிரிக்கெட்டில் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News March 7, 2026

SPORTS 360°: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் அபாரம்

image

*ISL கால்பந்தில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது *PRAGUE செஸ் மாஸ்டர்ஸில் அரவிந்த் சிதம்பரம் 3-வது இடம் பிடித்தார் *வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில், லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

News March 7, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

News March 7, 2026

திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: பா.ரஞ்சித்

image

நாங்குநேரியிலும், சிவகங்கை இடைக்காட்டூரிலும் நடந்த சாதிவெறி தாக்குதல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். தனது X பதிவில், கடந்த 6 ஆண்டுகளில் நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, இப்பிரச்னைகளை எதிர்கொள்வதில் திமுக அரசும், போலீசும் தோல்வி அடைந்திருப்பதாக அவர் சாடியுள்ளார். எனவே, TN-ல் சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!