News August 6, 2025

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடு

image

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகைதரும் மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வரிசை செய்ய பட்டுள்ளது என்றும், அவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய சான்றிதழ் மற்றும் வயதுக்கு ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

தூத்துக்குடி: என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை – அமைச்சர்

image

முஸ்லீம்லீக் கட்சியில் 79 ம் ஆண்டு நிறுவன விழா மற்றும் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற தொகுதியில் 5 வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு மக்கள் பணி செய்து வருகிறேன் என பேசினார்.

News March 12, 2026

தூத்துக்குடி: பட்டப் பகலில் பர்தா கொள்ளையர்கள் அட்டூழியம்

image

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பகுதியில் நேற்று மதியம் பர்தா அணிந்த கொள்ளையர்கள் அப்பகுதியில் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அவர்களை விரட்டிய போது அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பர்தாவை தூக்கி வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 12, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

error: Content is protected !!