News August 6, 2025

திருப்பூர் காவல் அதிகாரி கொலை: தனிப்படைகள் அமைப்பு

image

திருப்பூர், மடத்துக்குளம் பகுதியில் நேற்றிரவு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 10, 2025

பாலியல் தொழில் நடத்தி வந்த 3 பேர் கைது

image

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வாடகை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேக் முகமது என்கிற சலீம் (30), விக்னேஷ் (23) மற்றும் பன்னீர்செல்வம் (35) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

News August 9, 2025

திருப்பூரில் கூட்டுறவு சங்கத்தில் வேலை: ரூ.76,380 சம்பளம்!

image

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 9, 2025

திருப்பூர்: சிறப்பு மருத்துவ முகாம்

image

தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் பெயரில் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற நலம் பெறும், ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் அமித் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!