News August 6, 2025
தூத்துக்குடி பட்டதாரிகளே.. SBI-ல் 5,180 வேலை… LAST DATE: ஆக.26

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
Similar News
News December 9, 2025
தூத்துக்குடி: மொட்டை மாடியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரபட்டி பொன்னகரத்தை சேர்ந்தவர் முத்துமாரி (49). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், நேற்று தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள பனை மரத்தின் ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் இடறி வீட்டின் கீழே இருந்த கழிவறையில் விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News December 9, 2025
தூத்துக்குடி: புதிய வாக்காளர்கள் கவனத்திற்கு…

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று (டிச.9, செவ்வாய்) முதல் விண்ணப்பிக்கலாம்.18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேவையான ஆவணங்கள்: 1.ஆதார் கார்டு, 2.போட்டோ 1, 3.பிறப்புச்சான்றிதழ், 4.பள்ளிச் சான்றிதழ் (TC), இன்று அருகில் உள்ள மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
News December 9, 2025
தூத்துக்குடி ரயில் பயணிகளே.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இதோ

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் டிச. 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும். SHARE


