News August 6, 2025
தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News August 7, 2025
‘கிங்டம்’ படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு?

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் காவல்துறை, நாதக பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்ததால் நாதக போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை அணுகியது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு என கூறி, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை: CM

கடந்த 4 ஆண்டுகளில் அரசு, தனியார்கள் மூலமாக 6,41,664 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ₹10.63 லட்சம் கோடிகள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் 2வது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News August 7, 2025
ஆடி வியாழக்கிழமை எந்த தெய்வத்தை வணங்கலாம்?

ஆடி மாதம் ஒவ்வொரு கிழமையும் சில தெய்வங்களுக்கு விசேஷ வழிபாடு இருக்கும். அப்படி வியாழக்கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று பார்ப்போம். இந்நாளில் நாம் குருவாக எண்ணும் எந்த மகான்களைப் போற்றி வணங்கலாம். உதாரணமாக சாய்பாபா, ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படித்தால் கல்வி மேன்மை பெறும் என நம்பப்படுகிறது.