News August 6, 2025
மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமா, முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.
Similar News
News March 6, 2026
130+ மணிநேரத்துக்கு மேலாக ஆப்லைனில் ஈரான்!

போர் தொடர்வதால் ஈரானில் 130+ மணி நேரத்திற்கும் மேலாக இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானின் நெட்வொர்க் வேகம் 1% முதல் 5% வரை மட்டுமே உள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான ‘நெட்பிளாக்ஸ்’ தெரிவித்துள்ளது. உள்நாட்டு தகவல்கள் கசிவதைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு போராட்டத்தின் போதும் இதேபோன்று இணைய சேவை கட்டுப்படுத்தப்பட்டது.
News March 6, 2026
பெட்ரோல் விலை உயருமா.. தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வு விலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாகவும், உள்நாட்டு சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.. ஓபிஎஸ் ஷாக்

திமுகவில் இணைந்த OPS, தனது ஆதரவாளர்களை அக்கட்சியில் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், அவரது அணியில் இருந்த பலரும் அதிமுகவிற்கு திரும்பி ஷாக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் T ராமசாமியின் மகன் TR சீனிவாசன் EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.


