News August 6, 2025
கொல்லப்பட்ட SI குடும்பத்துக்கு ₹30 லட்சம் நிதியுதவி: CM

உடுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட SI குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ₹30 லட்சம் நிதியுதவியையும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற SI சண்முகவேலை 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீசாருக்கு CM உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 7, 2025
கம்பீரை எழுந்து நின்று வணங்குவீர்களா? சித்து

கம்பீரை விமர்சித்தவர்கள் இப்போது எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்வார்களா என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தது குறித்து பேசிய அவர், நமது அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு கம்பீரின் விவேகம் தான் காரணம் என தெரிவித்துள்ளார். நியூசி., ஆஸி., அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியின் போது கம்பீர் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.
News August 7, 2025
டிரம்ப் வரிவிதிப்பு: எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால் கெமிக்கல், தோல், காலணிகள், ஜவுளி, நகை போன்ற உள்நாட்டு ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். கரிம வேதிப்பொருள்கள் 54%, கம்பளங்கள் 52%, பின்னப்பட்ட ஆடைகள் 63.9%, மரச்சாமான்கள் 52.3%, நகைகளுக்கு 52.1% வரியை இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்த நேரிடும். அதேவேளையில், கூடுதல் ஏற்றுமதி வரியை ஈடுசெய்ய, அமெரிக்காவில் இவற்றின் விலைகளை உயர்த்த நேரிடும்.
News August 7, 2025
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். *உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.