News August 6, 2025

தர்மபுரி மாவட்டத்தின் பெய்த மழை அளவு

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 42.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்பைநல்லூரில் 32.2 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி.மீ, தீர்த்தமலையில் 6.6 மி.மீ, பாலக்கோடு சுகர்மில்லில் 6.5 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் 3 மி.மீ மழையும், பென்னாகரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Similar News

News August 7, 2025

தருமபுரி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News August 7, 2025

தர்மபுரியில் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன்(45), கூலி தொழிலாளி. கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற போது தர்மபுரியில் இருந்து வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடத்தூர் போலீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 6, 2025

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த கலெக்டர்

image

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட உணவு பொருள் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (06.08.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட நியமன அலுவலர் மரு.P.K.கைலாஷ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!