News August 6, 2025
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல்

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்ட பின் வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா். ரம்ஜானுக்கு முன்னர் தேர்தலை முடிக்கும் நோக்கில் வங்கதேச அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
Similar News
News August 7, 2025
ஆகஸ்ட் 7: வரலாற்றில் இன்று

*1906 – கல்கத்தாவில் முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. *1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை ஜப்பானில் விற்பனைக்கு விட்டது.. *1941- ரவீந்திரநாத் தாகூர் இறந்த நாள். *1945 – ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமன் அறிவித்தார். *2018- முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த நாள்.
News August 7, 2025
கம்பீரை எழுந்து நின்று வணங்குவீர்களா? சித்து

கம்பீரை விமர்சித்தவர்கள் இப்போது எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்வார்களா என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தது குறித்து பேசிய அவர், நமது அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு கம்பீரின் விவேகம் தான் காரணம் என தெரிவித்துள்ளார். நியூசி., ஆஸி., அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியின் போது கம்பீர் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.
News August 7, 2025
டிரம்ப் வரிவிதிப்பு: எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால் கெமிக்கல், தோல், காலணிகள், ஜவுளி, நகை போன்ற உள்நாட்டு ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். கரிம வேதிப்பொருள்கள் 54%, கம்பளங்கள் 52%, பின்னப்பட்ட ஆடைகள் 63.9%, மரச்சாமான்கள் 52.3%, நகைகளுக்கு 52.1% வரியை இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்த நேரிடும். அதேவேளையில், கூடுதல் ஏற்றுமதி வரியை ஈடுசெய்ய, அமெரிக்காவில் இவற்றின் விலைகளை உயர்த்த நேரிடும்.