News August 6, 2025

அதிமுக முன்னாள் MLA துரை.அன்பரசன் காலமானார்

image

அதிமுக EX MLA துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். எம்ஜிஆர், ஜெ., உள்ளிட்டோரின் அன்பை பெற்ற அவர், 1984 – 1987 வரை நெல்லிக்குப்பம் எம்எல்ஏவாக இருந்தார். தென்னாற்காடு மாவட்ட அதிமுக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது உடலுக்கு அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Similar News

News March 7, 2026

தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

image

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

News March 7, 2026

விஜய்க்கு மேலும் அதிர்ச்சி.. கண்ணீர்விட்ட புஸ்ஸி ஆனந்த்

image

பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், அதற்கு அருகிலுள்ள வில்லிவாக்கத்தில் போட்டியிட புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டாராம். ஆனால், அங்கு ஆதவ் களமிறங்குவார் என விஜய் கூறியதால் அவர் மனமுடைந்ததாக தகவல் கசிந்துள்ளது. பின்னர், நேற்று வந்த சிலருக்காக நீண்டநாள் விசுவாசியான தன்னை அவமதிப்பதா என விஜய்யிடம் அவர் கண் கலங்கினாராம். விவாகரத்து பிரச்னையை தொடர்ந்து, சீட் சிக்கல் எழுந்துள்ளதால் விஜய் அப்செட்டில் உள்ளாராம்.

News March 7, 2026

இந்தியாவின் பாதுகாப்பில் ஈரானின் கப்பல்

image

இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட ஈரானின் IRIS DENA போர்க்கப்பலில் சிக்கி தவித்தவர்களுக்கு இந்தியா உதவவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், Vizag-ல் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்ற IRIS LAVAN போர்க்கப்பல் தற்போது பாதுகாப்பாக கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக ஈரான் கூறிய நிலையில், இந்தியா உடனடியாக IRIS LAVAN-ஐ கொச்சியில் நிறுத்த அனுமதித்துள்ளது.

error: Content is protected !!