News August 6, 2025
மக்களே, இவர்களை தவிருங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பின்வரும் குணங்களை கொண்டவர்களை தவிருங்கள்: 1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2)உங்களை அவமதிப்பவர்கள்/ மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள்/ தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.
Similar News
News August 7, 2025
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். *உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.
News August 7, 2025
வாடகைக்கு மட்டுமே ₹1,500 செலவு: PM வருத்தம்

டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பல மத்திய அமைச்சகங்கள் இயங்கி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் போதிய வசதிகள் இன்றி அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றிற்கு வாடகை ₹1,500 கோடி செலவாவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஆனால், ‘விக்ஷித் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் ஒருபகுதியாக புதிய கட்டிடங்களுக்கு அமைச்சகங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
இனவெறி.. 6 வயது இந்திய சிறுமி மீது தாக்குதல்

அயர்லாந்தில் இனவெறி காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், சைக்கிளை ஏற்றி 12-14 வயது சிறுவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதலாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.