News August 6, 2025
திருநெல்வேலி: போராட்டங்களுக்கு தடை – காவல்துறை

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்: திருநெல்வேலியில் வருகின்ற அடுத்த 15 நாட்களுக்கு பொதுமக்கள் அனுமதியின்றி கூடுதல் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பாக இந்த உத்தரவானது நாளை (ஆகஸ்.06) முதல் வருகின்ற (ஆகஸ்.20) வரை அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
இளம் வில்லுப்பாட்டு கலைஞரை கௌரவித்த கலெக்டர்

நெல்லை பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி பல்வேறு கோயில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆன்மீக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகி வருகிறார். சிறு வயது முதலே வில்லுப்பாட்டு கலையை ஆர்வமாக மேற்கொண்டு வரும் கலைஞர் மாதவியை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கௌரவித்து கலையை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டினார்.
News August 7, 2025
நெல்லையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தின் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
நெல்லை: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

நெல்லை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.