News August 6, 2025
குமரி இளைஞர்கள.. வன்கொடுமை தடுப்புக்குழு பதவி அறிவிப்பு!

நாகர்கோவில் R.D.O அளவில் ஆதிதிராவிடர் நலக்குழு, வன்கொடுமை தடுப்புக் குழு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு குழு உறுப்பினர்களின் பதவிகாலம் முடிந்து விட்டது. இதற்கு புதிய உறுப்பினர்கள் பதவிக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தன்னார்வலர்கள், நாகர்கோவில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனுவை அளிக்கலாம் என குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News August 7, 2025
குமரியில் உழவரைத்தேடி வேளாண்மை முகாம்

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டத்தின் படி ஆக.8 அன்று வடக்கு தாமரைகுளம், குலசேகரம் உட்பட 18 கிராமங்களில் முகாம்கள் நடக்கிறது. இம்முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின்வட்டார அலுவலர்கள், உழவர்களை வருவாய் கிராமங்களுக்கே சென்று நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவார்கள். இம்முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
கள்ளநோட்டுகள் வைத்திருந்த 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்

மணலியில் வெனான்சியஸ், சசி, கிளைமண்ட், அமல்ராஜ் ஆகிய 4 பேர் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வெனான்சியஸ் இறந்துவிட்டார். சசி தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையில் கிளைமண்ட் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News August 6, 2025
இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி

புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் IOB ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் 30 நாள் இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி ஆக.8 அன்று நாகர்கோவிலில் தொடங்க உள்ளது. இதில் உணவு, சீருடை, பயிற்சி, பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 944844019, 6379596738, 9791894159 என்ற எண்ணை அழைக்கலாம்.