News August 6, 2025

திருப்பூர் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

image

திருப்பூர் மக்களே, விழாக்காலங்களில் ஆன்லைனில் அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் மூலம், ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன. அதனை சரியாக ஆராயாமல், பொருட்கள் வாங்க நீங்கள் பணம் செலுத்தும்போது, மோசடிக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின் பொருட்களை வாங்க வேண்டும் என திருப்பூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News August 7, 2025

திருப்பூர்: 10-ம் வகுப்பு போதும்.. ரயில்வேயில் வேலை!

image

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 50 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர், முதுநிலை எழுத்தர் (கிளார்க்), இளநிலை எழுத்தராக பணியமர்த்தப்படுவர். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.8.2025 ஆகும். SHARE பண்ணுங்க.

News August 7, 2025

திருப்பூர்: இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News August 7, 2025

திருப்பூரில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுண்டரில் பலி

image

குடிமங்கலத்தில் ssi சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற போது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது, போலீசார் சுட்டதில் சம்பவயிடத்திலேயே மணிகண்டன் பலியானார். உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

error: Content is protected !!