News August 6, 2025
கூட்டணிக் கட்சிகள் குறித்து பேச திமுகவினருக்கு தடை

திமுக தலைமை அறிவுறுத்தலின்பேரில், மதுரை MP சு.வெங்கடேசன் & கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக பேச திமுகவினருக்கு தடைவிதித்து மதுரை மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் லாப நோக்கத்திற்காக சமரசம் செய்யப்படுவதாக ஆளும் கட்சியினர் குறித்து சு.வெ அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
டிரம்ப் விதித்ததற்கு இதுதான் காரணமா?

டிரம்ப்பின் 50% வரி விதிப்பிற்கு, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தவிர வேறொரு காரணமும் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா – சீனா உறவு மேம்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். 2019க்கு பிறகு PM மோடி முதல்முறையாக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். BRICS நாடுகள் ஒன்றிணைந்தால் அமெரிக்க டாலருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என டிரம்ப் அச்சப்படுவதாக கூறுகின்றனர்.
News August 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 420 ▶குறள்: செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். ▶பொருள்: செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.
News August 7, 2025
ஆசிய கோப்பை: ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா?

வரும் செப்.9-ம் தேதி தொடங்க ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல்லில், 175 ஸ்டிரைக் ரேட்டில் 600+ ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயருக்கு அணியில் இடம்கிடைக்குமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் முதல் அவர் சர்வதேச டி20-களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.