News April 6, 2024
சிவகங்கை: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 145 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 13, 2025
சிவகங்கை: மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
News April 13, 2025
திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோவில் வரலாறு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் திருநோக்கிய அழகியநாதர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம். துளசியால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே தலம் இதுவேயாகும். பிரதோஷத்தின் போது இங்குள்ள இரண்டு மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
News April 13, 2025
வரலாற்று சிறப்பு மிக்க சங்கரபதி முனீஸ்வரர்

காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள சங்கரபதி முனீஸ்வரர் வரலாற்று சிறப்பு மிக்க தெய்வம். மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களால் பிடிக்கும் முன் அவர்கள் தங்கி இருந்த சங்கரபதி கோட்டைக்கு அருகில் இருப்பதால் சங்கரபதி முனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்த கோயில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி தேங்காய் உடைத்து செல்வது வழக்கம்.