News August 6, 2025

நாகையில் இலவச AC பழுது நீக்கும் பயிற்சி

image

நாகை IOB ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச AC & FRIDGE பழுதுநீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 6374005365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 8, 2025

ரூ.1.5 லட்சம் பரிசு: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

மகளிர் மேம்பாடு, பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, தமிழக அரசால் ஆண்டுதோறும் அவ்வையார் விருது மற்றும் ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும் டிச.31-க்குள் விருதுக்கு விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

நாகை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

நாகை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக்<<>> செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

News December 7, 2025

நாகை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in என்ற இணையதளம்<<>> மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!