News August 6, 2025

தென்காசி: அதிமுகவினர் சாலை மறியல்!

image

தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது அவரை வரவேற்று அதிமுக சார்பாக நான்கு வழிச்சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கபட்டன. வேட்டைக்காரன்குளம் சாலையில் அமைக்கபட்ட அதிமுக கொடிகம்பங்களை போலீசார் அகற்றி அவமதித்தாக கூறி அதிமுகவினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News

News August 7, 2025

கரடி தாக்கி காயமடைந்த பெண்களுக்கு நிவாரண தொகை

image

புளியங்குடியில் கரடி தாக்கி காயம் அடைந்த மூன்று பெண்களையும் தென்காசி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணத் தொகை வழங்கினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News August 7, 2025

அஞ்சல்துறையை கண்டித்து பட்டினி போராட்டம்

image

சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

தென்காசி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தென்காசி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!