News August 6, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 7, 2025
சிறுமியிடம் அத்துமீறிய விஏஓ போக்சோவில் கைது

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் இன்று பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
News August 7, 2025
இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஆக.6) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
கடலூர்: BANK லாக்கரில் நகை வைக்க போறீங்களா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!