News August 6, 2025

மீண்டும் CAB தலைவராகும் கங்குலி?

image

முன்னாள் BCCI தலைவர் சவுரவ் கங்குலி, மீண்டும் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (CAB) உள்ளார். வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள CAB ஆண்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக, தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது. கங்குலியின் சகோதரர் ஸ்நேகாஷிஷ் தான் தற்போது CAB தலைவராக இருக்கிறார்.

Similar News

News March 6, 2026

திமுக மீது அதிருப்தியில் இருக்கிறதா விசிக?

image

திமுக கூட்டணியில் உள்ள விசிக இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற முயற்சித்து வருகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என திமுக நிராகரிப்பதால், தொகுதிகளை குறைத்தால் 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என டீலிங்கை மாற்றிப்பார்த்ததாம். ஆனால் விசிக கேட்ட 2 டிமாண்டுகளுக்கும் திமுக பிடிகொடுக்காமல் இருப்பதால் விசிக கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News March 6, 2026

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $88 (இந்திய மதிப்பில் ₹8,077) குறைந்து $5,089.47-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 குறைந்து $83.04-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 6, 2026

திமுகவிடம் DCM பதவி கேட்டாரா பிரேமலதா?

image

தேமு​தி​க​வுக்கு DCM பதவி வேண்​டும் என திமுகவிடம் பிரேமலதா கேட்​ட​தாக​வும், இதனால்தான் கூட்டணி தாமதமானது எனவும் சமீப​கால​மாக தகவல் பரப்​பப்​பட்டு வந்​தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா விளக்​கமும் அளித்​திருக்​கி​றார். தாங்​கள் இது வேண்​டும், அது வேண்​டும் என்று யாரிட​மும் அடம் பிடித்​தது கிடை​யாது எனவும், மற்ற கட்​சிகளை போலவே தங்​களுக்​கான உரிய இடத்தை தாங்​கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!