News August 6, 2025
ரஷ்யாவில் பாதுகாப்பு ஆலோசகர்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா அச்சுறுத்தி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது இந்த பயணம் அமைந்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இந்த மாத இறுதியில் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பின் வரி மிரட்டல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Similar News
News August 7, 2025
யூட்யூப் காட்டி சோறு ஊட்டும் பெற்றோரா?

யூடியூப் காட்டித்தான் இன்று குழந்தைகளை வளர்க்கவே செய்கிறோம். துள்ளல் பாடல்கள், கார்ட்டூன் என வீட்டில் மட்டுமல்லாது, பொது இடங்களிலும் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிடுகிறோம். இதனால் சிறுவயதிலேயே கண் பிரச்னைகள், தூக்கமின்மை, மன உளைச்சல் வரை ஏற்படுகின்றன. இப்படி பழக்கினால் குழந்தைகளை போனிடமிருந்து மீட்கவே முடியாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் எப்படி?
News August 7, 2025
இந்திரா காந்தியை ஃபாலோ பண்ணுங்க: மோடிக்கு அட்வைஸ்

இந்தியா மீது அமெரிக்கா இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்தியுள்ளதற்கு, மோடியை காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 2019 ‘ஹவ்டி மோடி’ முதல் பாக்., போர்நிறுத்தம் வரை டிரம்ப்புக்கு மோடி ஆதரவளித்தார். ஆனால், வரிவிதிப்பின் மூலம் மோடியின் தோல்வி வெளிப்பட்டுள்ளது என்ற அவர், மோடி தன் ஈகோவை ஒதுக்கிவிட்டு, இந்திரா காந்தியை முன்மாதிரியாக கொண்டு நம் வெளிநாட்டுக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றார்.
News August 7, 2025
டாப்பர் குழந்தைகளும் நட்பு ஏக்கமும்!

பள்ளிகளில் டாப்பர் பிள்ளைகள் பலரும் நல்ல நண்பர்களுக்காக ஏங்குவார்கள் எனத் தெரியுமா? அவர்களுக்கு நண்பர்கள் இருந்தாலும் அது படிப்பையும் மதிப்பெண்களையும் சுற்றி மட்டுமே இருக்கும். இந்த சூழலில் பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கான நட்பையும் வெளியில் நட்பு கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். இந்தப் பிள்ளைகள் தனிமையில் வீழ்ந்துவிடாமலும் பெற்றோர் உதவ வேண்டும்.